ரூ2.37 லட்சம் கோடி கடன் தள்ளுபடி: ராகுல்காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி: காங்கிரஸ் இடைக்கால தலைவர் ராகுல்காந்தி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘2020ம் ஆண்டில் கொரோனா தொற்றால் இந்தியா பெரும் பொருளாதார பாதிப்பைச் சந்தித்துள்ளது. இந்த சூழ்நிலையில் சில பெரிய தொழிலதிபர்களின் ரூ.2.37 லட்சம் கோடி வங்கிக் கடனை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளது. இந்தத் தொகையை 11 கோடி குடும்பங்களுக்கு தலா 20 ஆயிரம் ரூபாயாக பிரித்து அளித்திருக்க முடியும்.

பொதுமுடக்கத்தால் வேலை, தொழில் வாய்ப்புகளை இழந்த பல கோடி குடும்பங்களுக்கு இந்தத் தொகை மூலம் உதவியிருக்க முடியும்’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: