மதுரை எய்ம்ஸ் கட்டுமானத்திற்கு மார்ச்சில் ஒப்பந்தம் கையெழுத்து: ஆர்டிஐயில் தகவல்

மதுரை: தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் சமூக ஆர்வலர் பாண்டியராஜா, மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகத்தில் மதுரையில் எய்ம்ஸ் அமைப்பது தொடர்பாக ஆர்டிஐயில் தகவல் கேட்டிருந்தார். இதற்கு அமைச்சகத்தின் சார்பில்  அளிக்கப்பட்ட பதிலில், ‘‘மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்குரிய நிதியை ஜப்பான் நாட்டின் ஜிகா நிறுவனத்திடமிருந்து கடனாக பெறுகிறோம். இந்திய அரசும், ஜப்பான் அரசின் ஜிகாவுடன் இணைந்து கடன் பெறுவது சம்பந்தமாக தொடர்ந்து  பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதுதொடர்பான கூட்டம் கடந்த டிச. 24ல் நடந்தது. கடன் வழங்குதல் ஒப்பந்தம் 2021, மார்ச்சில் இறுதி செய்யப்படும். ஜிகா நிறுவனம் மொத்த நிதியில் 85 சதவீதத்தை, அதாவது சுமார் ரூ.2 ஆயிரம் கோடி  வரையிலும் கடனாக வழங்கும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சில கேள்விகளுக்கு மத்திய சுகதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் அளித்த பதிலில், ‘‘2021-22ல் மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பாக எந்த தகவலும் இல்லை.  மாணவர் சேர்க்கை தொடர்பாக 2021க்கு பிறகுதான் தெரிய  வரும். மதுரை எய்ம்ஸ்சில் கட்டுமானம் முடிந்து தயாரான பிறகே வகுப்புகள் தொடங்கும்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: