திருமங்கலம் அருகே சாலை அமைக்கும் பணியில் இடையூறு.: அதிமுக நிர்வாகி கொலை மிரட்டல் விடுப்பதாக குற்றச்சாட்டு

மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கொலை மிரட்டல் விடுக்கும் அதிமுக நிர்வாகி மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தயங்குவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். திருமங்கலம் அடுத்த புங்கங்குளம் கிராமத்தில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் இப்பணிக்காக நில அளவை செய்யும் போது ஆளும் கட்சியின் பிரமுகரின் வீடு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இடையூறாக இருப்பது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக பல முறை புகார் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். புகார் கொடுத்த எங்களையும் அதிமுக கிளை செயலாளர் சிவபிரகாசம் கொலை மிரட்டல் விடுத்து வருவதாக கிராமமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

ஆளும் கட்சி நிர்வாகி சிவபிரகாசத்தின் வீடு ஆக்கிரமிப்பில் உள்ளதை அறிந்தும் அதனை பொருட்படுத்தாமல் அதிகாரிகள் செயல்பட்டு வருவது கிராமமக்களிடையே கவலை அடைய செய்துள்ளது. மேலும் அதிகாரிகளுடன் காவல்துறையினரும் இந்த பிரச்சனையில் ஒன்று சேர்ந்து ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால் புங்கங்குளம் கிராம மக்கள் செய்வது அறியாமல் தவிப்பில் உள்ளனர்.

Related Stories: