கர்நாடகாவில் இயங்கி வரும் தொழில்நுட்ப கல்லூரிகளில் இன்டஸ்ட்ரியல் ஹப்: விஷ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் திட்டம்

பெலகாவி: மாநிலத்தில் இயங்கி வரும் தொழில்நுட்ப கல்லூரிகள் மற்றும் தொழிற்சாலைகள் இடையில் இணைப்பை ஏற்படுத்தும் வகையில் இன்ஜினியரிங் கல்லூரி வளாகத்தில் தொழிற்பேட்டை அமைக்கும் புதிய திட்டத்தை விஷ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் தொடங்குகிறது. மாநிலத்தில் இயங்கிவரும் இன்ஜினியரிங் கல்லூரிகள் அனைத்தும் பெலகாவியில் உள்ள விஷ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வருகிறது. இதில் பெங்களூரு மண்டலத்தில் 107, பெலகாவி மண்டலத்தில் 34, கலபுர்கி மண்டலத்தில் 18, மைசூரு மண்டலத்தில் 60 இன்ஜினியரிங் கல்லூரிகள் இயங்கி வருகிறது. இது தவிர தன்னாட்சி சுதந்திரத்துடன் இயங்கி வரும் 19 இன்ஜினியரிங் கல்லூரிகள் உள்ளது. தொழில்நுட்ப கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள், ஒவ்வொரு ஆண்டும் பிராஜக்ட் தாக்கல் செய்ய வேண்டும். சில மாணவர்கள் தனியாக தங்கள் கண்டுப்பிடிப்புகளை தாக்கல் செய்வார்கள், சிலர் கூட்டு முயற்சியில் தாக்கல் செய்வார்கள்.

இதற்காக தொழிற்சாலைகளின் உதவிகளை நாடுகிறார்கள். மேலும் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களை வேலைக்கு தேர்வு செய்வதற்காக தனியார் கம்பெனிகள் கேம்பஸ் தேர்வுகள் நடத்துகிறது. இப்படி தொழில் கல்வி படிக்கும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு இன்ஜினியரிங் கல்லூரிகள் இருக்கும் இடத்தில் தொழில் ஹப் உருவாக்கினால் படிக்கும் காலத்தில் அவர்களின் தொழில் பயிற்சியை ஊக்கப்படுத்தவும், கண்டுப்பிடிப்புகளுக்கான அறிவாற்றலையும் வளர்த்து கொள்வதுடன் வேலைவாய்ப்புகளை எளிதில் பெற இன்ட்ஸ்டிரியல் ஹப் பயனுள்ளதாக இருக்கும். இதைகருத்தில் கொண்டு தனியார் கம்பெனிகளுடன் விஷ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதன் மூலம் தொழில் துறையில் சாதனைப்படைத்த நிபுணர்கள் மூலம் பயிற்சி கொடுப்பது, இன்டர்ஷிப் வாய்ப்புகள் வழங்குவது, பிராஜக்ட் மூலம் தொழில் அறிவாற்றல் ஏற்படுத்துவது, வேலைவாய்ப்புக்கான உத்தரவாதம் வழங்குவது உள்பட பல நன்மைகளை வளரும் தலைமுறையினருக்கு ஏற்படுத்தி கொடுக்க முடிவு செய்துள்ளது.

* கல்லூரிகள் இருக்கும் இடத்தில் தொழில் ஹப் உருவாக்கினால் படிக்கும் காலத்தில் அவர்களின் தொழில் பயிற்சியை ஊக்கப்படுத்தவும், கண்டுப்பிடிப்புகளுக்கான அறிவாற்றலையும் வளர்த்து கொள்ள பயனுள்ளதாக இருக்கும்.

Related Stories: