பொங்கல் பண்டிகைக்கு பின்னர் எடியூரப்பா முதல்வர் பதவி இழப்பது உறுதி: முன்னாள் எம்எல்ஏ ஆருடம்

ஷிவமொக்கா: பொங்கல் பண்டிகைக்கு பின்னர் முதல்வர் எடியூரப்பா பதவி இழப்பது உறுதி என்று முன்னாள் எம்எல்ஏ பேலூர் கோபாலகிருஷ்ணா தெரிவித்தார்.  இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, ``சிகந்தூர் சவுடேஷ்வரி தேவியின் கோயில் விவகாரத்தில் அரசின் கையாடல் காரணமாக எடியூரப்பாவுக்கு அம்மனின் சாபம் கிடைக்கும் என்று கூறியிருந்தேன். சவுடேஷ்வரி அம்மனின் சாபம் காரணமாக முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிரான டி நோடிபிகேஷன் வழக்கு மீண்டும் உயிர்பெற்றுள்ளது. இப்போது, அவருக்கு நெருக்கமானவர்களே முதல்வர் பதவியைஇழக்கும் நேரம் நெருங்கி வருகிறது என கூறிவருகின்றனர்.

இதுவும் அம்மனின் சாபம் பாஜ எம்எல்ஏக்களின் சாபம். டிநோடிபிகேஷன் புகார் வந்ததுமே முதல்வர் எடியூரப்பா ராஜினாமா செய்திருக்க வேண்டும். ஊழல்வாதிகளை அதிகாரத்தில் இருக்க விடமாட்டோம் என்று கூறிய பிரதமர் மோடியும், அமித்ஷாவும் எடியூரப்பாவை பதவியில் இருந்து இறக்க வேண்டும். இளைஞர் கொண்டாடும் புத்தாண்டை தடை செய்துள்ளது கண்டிக்கத்தக்கது. இதின் பின்னணியில் ஆர்எஸ்எஸ்சின் கைவரிசை உள்ளது.  பிரிட்டன் உருமாற்ற கொரோனாவை காரணம் கூறி டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தை தடுக்க பாஜவினர் முயற்சித்து வருகின்றனர்’’ என்றார்.

Related Stories: