தோடாப்பூரில் கழிவுநீர் கால்வாய்90 நாட்களில் சரிசெய்யப்படும்: ராகவ் சதா எம்எல்ஏ உறுதி

புதுடெல்லி,டிச.29: தோடாபூர் கிராமத்தில் சேதமடைந்த கழிவுநீர் கால்வாய் பாதையை 90 நாட்களுக்குள் சீரமைத்து தரப்படும் என்று டெல்லி குடிநீர் வாரியத்தின் துணை தலைவர் ராகவ் சதா அப்பகுதி மக்களுக்கு உறுதியளித்தார்.

டெல்லியின் ராஜீந்தர் நகர் தொகுதி எம்எல்ஏவான ராகவ் சதா, குடிநீர் வாரியத்தின் துணை தலைவராகவும் இருந்து வருகிறார். வாரந்தோறும்  தமது தொகுதிக்கு சென்று அங்குள்ள மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து வருகிறார். தற்போது அவரது தொகுதிக்குட்பட்ட தோடாப்பூர் கிராமத்திற்கு சென்றார். அங்கு வசிப்பவர்களிடம் சேதமடைந்த கழிவுநீர் பாதை காரணமாக அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார்.

அப்போது அவர் தெரிவிக்கையில்,”ஒவ்வொரு வீட்டிலும் உள்ள கழிவுநீர் பாதை முறையாக செயல்பட்டால் மட்டுமே கழிவுநீரை முறையாக சுத்திகரிக்க முடியும். தோடாபூரில் சேதமடைந்துள்ள கால்வாய் 90 நாட்களில் சரி செய்யப்பட்டு கழிவுநீர் பாதை தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் முடித்து வைக்கப்படும் என நான் உறுதியளிக்கிறேன்,” என்றார். அரசாங்கங்கள் கடுமையான நிதி நெருக்கடியை சந்திக்கும் இந்த நேரத்தில், அரவிந்த் கெஜ்ரிவால் அரசு, கழிவுநீர் பாதையை உடனடியாக நிவர்த்தி செய்வதற்கும் மாற்றுவதற்கும் ஒரு மொத்த தொகையை ஒதுக்கியுள்ளது என்றும் சதா தெரிவித்தார்.

Related Stories: