கூட்டணி அமைச்சரவையை மக்கள் ஏற்க மாட்டார்கள்: பாஜ, பாமகவுக்கு முதல்வர் எடப்பாடி சூடு

கோவை: கூட்டணி அமைச்சரவையை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள், அதிமுகவின் நிலைப்பாடும் இதுதான் என பாஜ, பாமகவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சூடான பதில் அளித்துள்ளார். தமிழக  முதல்வர் எடப்பாடி பழனிசாமி ேநற்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம்  கோவை வந்தார். பீளமேடு விமான நிைலயத்தில் அவர் அளித்த பேட்டி: சென்னை  பெருநகரில் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் ஏராளமான மேம்பாலங்கள் கட்டி  முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டில் உள்ளன. ஆனால், தவறான கருத்துக்களை  பரப்பி வருகின்றனர்.  தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்கிறது. நாங்கள் முதல்வர் வேட்பாளரை  அறிவித்து விட்டோம். எங்களது தலைமையில் கூட்டணி தொடர்கிறது. தமிழகத்தை  பொறுத்தவரை கூட்டணி மந்திரிசபையை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.  

அ.தி.மு.க.வின் நிலைப்பாடும் இதுதான். நடிகர் கமல்ஹாசனுக்கு தமிழகத்தை பற்றி என்ன தெரியும். 70 வயது வரை நடித்து விட்டு ரிட்டயர்டு ஆகும் நேரத்தில்   வந்து அரசியல் செய்கிறார். நான், 46 ஆண்டு காலம் அரசியலில் இருக்கிறேன்.   அவர் நடிப்பில் பெரிய ஆளாக இருக்கலாம். ஆனால், அரசியலில் பூஜ்ஜியம்தான். திரையரங்கம் முழுமையாக திறக்கப்படாமல் இருக்கிறது. அதுதொடர்பாக நடிகர் விஜய் இன்று (நேற்று) என்னை சந்தித்து பேசினார். தமிழகத்தில்  பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்காக பல்வேறு திட்டங்களை  அமல்படுத்தி வருகிறோம். இன்னும் பல திட்டங்கள் கைவசம் வைத்துள்ளோம்.  இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

பா.ஜ. இன்னும் உங்களை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கவில்லையே என்ற கேள்விக்கு முதல்வர், ‘‘இன்னும்   தேர்தல் தேதியே அறிவிக்கப்படவில்லையே’’ என்றார். அமைச்சரவையில் பங்கு வேண்டும் என்று பாஜகவும், துணை முதல்வர் பதவி வேண்டும் என்று பாமகவும் ெநருக்கடி கொடுத்து வந்த நிலையில் அந்த கட்சிகளுக்கு சூடு வைப்பது போல முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதன்முதலாக இவ்வாறு பேட்டி  அளித்துள்ளார்.

Related Stories: