கர்நாடக உயர் நீதிமன்ற கருவூலத்தில் இருக்கும் ஜெயலலிதாவின் கோடிக்கணக்கான மதிப்புள்ள தங்க, வைர ஆபரணங்களுக்கு வாரிசு யார்? அரசுடமை ஆக்கப்படுமா?

பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தால் முடக்கப்பட்டு பெங்களூருவில் உள்ள கர்நாடக உயர் நீதிமன்ற கருவூலத்தில் பத்தாண்டுக்கும் மேலாக வைத்திருக்கும் ஜெயலலிதாவின் தங்க, வைர ஆபரணங்களுக்கு யார் வாரிசு என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழக முதல்வராக ஜெயலலிதா கடந்த 1991 முதல் 1996ம் ஆண்டு வரை இருந்தபோது, ரூ.66.65 கோடி வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக தமிழக லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் முதல் குற்றவாளியாக ஜெயலலிதா, 2வது குற்றவாளியாக சசிகலா, 3வது குற்றவாளியாக வி.என்.சுதாகரன், 4வது குற்றவாளியாக இளவரசி ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

சென்னை தனி நீதிமன்றத்தில் நடந்து வந்த விசாரணை, உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் பெங்களூருவுக்கு மாற்றப்பட்டது. பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்ற கட்டிடத்தில் தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டு கடந்த 2004 முதல் 2014 வரை நடந்தது.

சுமார் 10 ஆண்டுகள் தொடர்ந்து நடந்த விசாரணை முடிந்து 2014 செப்டம்பர் 27ம் தேதி நீதிபதி ஜான் மைக்கல் டிகுன்ஹா வழங்கிய தீர்ப்பில் ஜெயலலிதா உள்பட நான்கு பேரையும் குற்றவாளியாக உறுதி செய்ததுடன் நான்கு பேருக்கும் தலா நான்காண்டுகள் சிறை தண்டனையும் முதல் குற்றவாளியான ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியும் மற்ற மூன்று பேருக்கு தலா ரூ.10 கோடியே 10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

பெங்களுரூ ஐகோர்ட் ரத்து செய்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து, தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தது. அதை தொடர்ந்து கடந்த 2017 பிப்ரவரி 15ம் தேதி வழக்கில் 2வது குற்றவாளியான சசிகலா, 3வது குற்றவாளியான சுதாகரன், 4வது குற்றவாளியான இளவரசி ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த 45 மாதங்களாக சிறையில் உள்ள குற்றவாளிகளுக்கு வரும் 2021 பிப்ரவரி மாதம் தண்டனை காலம் முடிகிறது. இதனிடையில் சசிகலா விடுதலை தொடர்பாக ஆர்டிஐ சட்டத்தில் சமூக ஆர்வலரின் கேள்விக்கு பதிலளித்திருந்த சிறை கண்காணிப்பாளர் 2021 ஜனவரி 27ம் தேதி சசிகலா விடுதலை செய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தார்.

கர்நாடக உயர்நீதிமன்ற கருவூலத்தில்  ஜெயலலிதாவுக்கு சொந்தமான ஆபரணங்கள்; இதனிடையில் சொத்து குவிப்பு வழக்கில் தமிழக லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு போலீசார் பறிமுதல் செய்த மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான 389 காலனிகள், 914 பட்டு சேலைகள், 6,195 பிற சேலைகள், 2,140 பழைய சேலைகள். 7 ரிஸ்ட் வாட்சுகள், 91 வகை ரிஸ்ட் வாட்சுகள். 86 தங்க ஆபரணங்கள், 26 தங்க ஆபரணங்கள், 41 தங்க ஆபரணங்கள், 228 தங்க ஆபரணங்கள், 394 தங்க ஆபரணங்கள், 1,116 கிலோ வெள்ளி பொருட்கள். 118 ஜோடி சாதாரண தங்கவளையல். 360 ஜோடி தங்க வளையல், 14 செட் தங்கவளையல், 46 ஜோடி ரூபி கற்கள் பதித்த பிரேஸ்லெட், சிங்கிள் பெர் காசு வளையல் 47,  விலையுயர்ந்த கற்கள் பதித்த மோதிரங்கள், நவரத்தினம் பதிக்கப்பட்ட மோதிரம், 316 கிராம் காசுமாலை, 80 கிராம் கொண்ட காசுமாலை, 487 கிராம் கொண்ட காசுமாலை, 1044 கிராம் ஒட்டியானம், தங்க 30 கிராம் குங்குமச்சிமிழ், 82 கிராம் தங்க குங்குமச்சிமிழ் சிமிழ், 32 கிராம் கொண்ட குங்குமச்சிமிழ், 89 செட் பென்டன்ட், 44 ரூபி கல் பதித்த பென்டென்ட், 14 60 ரூபி கல் பதித்த பென்டென்ட், 75 பல்வேறு விலை உயர்ந்த கடிகாரம், மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான 62 தங்க ஆபரணங்கள், சசிகலாவுக்கு சொந்தமான 34 தங்க ஆபரணங்கள் என தங்க, வைர, மாணிக்க ஆபரணங்கள், வெள்ளி பொருட்கள், பெங்களூரு தனி நீதிமன்ற உத்தரவின் பேரில் சென்னையில் இருந்து பெங்களூரு கொண்டுவரப்பட்டு கர்நாடக உயர் நீதிமன்றத்தின் கருவூலத்தில் கடந்த பத்தாண்டுக்கும் மேலாக வைக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கின் தீர்வு உச்சநீமன்றம் வரை சென்று குற்றம் நிரூபிக்கப்பட்டு ஜெயலலிதா மறைந்து விட்டதால், அவரை தவிர மற்ற மூன்று குற்றவாளிகள் நான்காண்டு சிறை தண்டனையை முடிக்கும் நிலையில் உள்ளனர். இந்நிலையில் கர்நாடக உயர்நீதிமன்ற கருவூலத்தில் உள்ள தங்க, வைர ஆபரணங்கள் தமிழக அரசுக்கு சொந்தமாக சேருமா? அல்லது ஜெயலலிதாவின் வாரிசுகள் முறைப்படி விண்ணப்பித்து கேட்டால், அவர்களுக்கு வழங்கப்படுமா? சொத்து குவிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அந்த ஆபரணங்கள் அனைத்தும் அரசுடமை ஆக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

* வைரம் பதித்த நகைகள்

124 வைரக்கற்கள் பதித்த தங்க வளையல், கோல்டு பிரேஸ்லெட்டில் 3 வைரக்கற்கள், 24 ரூபி கற்கள் பதிக்கப்பட்டது, 25 வைரக்கற்கள் பதித்த தங்கவளையல், 122 வைரக்கற்கள் பதித்த பிரேஸ்லெட், 105 வைரக்கல் பதித்த பிரேஸ்லெட், 76 வைரக்கற்கள் பதித்த தங்க வளையல், 20 வைரக்கற்கள், 28 வைரக்கற்கள் பதித்த கம்மல், 26 வைரக் கற்கள் பதித்த கம்மல், 34 வைரக்கல், 26 வைரக்கல், 40 வைரக்கல், 52 வைரக்கல், 36 வைரக்கல், 48 வைரக்கல், 54 வைரக்கல், 20வைரக்கல், 22வைரக்கல், 34 வைரக்கல், 28 வைரக்கல், 38 வைரக்கற்கள் பதித்த தனித்தனித் தோடு. 40, 48 , 46, 26, 32, 46, 40 வைரக்கற்கள் பதித்த தனித்தனி தங்கத் தோடுகள். 116 வைரக்கற்கள் பதித்த 4 நெக்லஸ், 112 வைரக்கற்கள் பதித்த நெக்லஸ், 118 வைரக்கற்கள் பதித்த நெக்லஸ், வெளிநாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட 563 வைரக்கற்கள் 16 எமரால்டு 3 ரூபி பதித்த நெக்லஸ், 122 வைரக்கல் பதித்த நெக்லஸ்.

408 வைரக்கல் பதித்த நெக்லஸ். 910 வைரக்கற்கள் பதித்த நெக்லஸ், 1090 வைரக்கல், 628 வைரக்கல் பதித்த நெக்லஸ் 5 தங்க சாமி சிலைகள், 30 வைரக்கல், வைரம் பதித்த 27 ஒட்டியானம், 121 கிராம் ஆரம், 106 வைரம் பதித்த ஆரம், 212 கிராம் நெக்லஸ். 165 வைரக்கற்கள் பதித்த  நெக்லஸ், 90 வைரக்கற்கள் பதித்த தோடு, 2,389 வைரக்கற்கள், என தங்க, வைர, மாணிக்க ஆபரணங்கள், வெள்ளி பொருட்கள், பெங்களூரு தனி நீதிமன்ற உத்தரவின் பேரில் சென்னையில் இருந்து பெங்களூரு கொண்டுவரப்பட்டு கர்நாடக உயர்நீதிமன்றத்தின் கருவூலத்தில் கடந்த பத்தாண்டுக்கும் மேலாக வைக்கப்பட்டுள்ளது.

Related Stories: