அறக்கட்டளைகள், தொண்டு நிறுவனங்கள் மூலம் ஜம்மு காஷ்மீரில் ஊடுருவிய துருக்கி: பாகிஸ்தானுக்கு ஆதரவாக சர்வதேச பிரச்னையாக்க முயற்சி

புதுடெல்லி: தனது நட்பு நாடான பாகிஸ்தானுக்கு உதவும் வகையில், ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்னையாக மாற்றும்  முயற்சியில் துருக்கி ஈடுபடுவதும், இதற்காக தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் மூலம் ஜம்மு காஷ்மீரில் அந்நாடு ஊடுருவி இருப்பதும் அம்பலமாகி இருக்கிறது.   இஸ்லாமிய நாடான துருக்கி, பாகிஸ்தானுக்கு நெருங்கி நட்பு நாடாக உள்ளது. இதன் அதிபர் அதிபர் டயானெட் எர்டோகன், சமீப காலமாக ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக அதிகமாக பேசி வருகிறார்.  குறிப்பாக, ஜம்மு காஷ்மீர்  மாநில சிறப்பு அந்தஸ்து ரத்து, யூனியன் பிரதேங்களாக பிரிக்கப்பட்ட பிறகு அவருயைட இந்த செயல்பாடு அதிகமாகி இருக்கிறது.

 தற்போது,  ஜம்மு காஷ்மீரில் மறைமுகமாக தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அறக்கட்டளைகள் மூலமாக துருக்கி நாட்டண்மை செய்து வருவது அம்பலமாகி இருக்கிறது. துருக்கியை அடிப்படையாக கொண்டு செயல்பட்டு வரும் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று, உலகளாவிய அளவில் தனது செயல்பாடுகளை கொண்டுள்ளது. மேலும், இவை இந்திய எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ரம்ஜான் பண்டிகையின்போது இந்த அமைப்புக்கள் உணவு மற்றும் பணத்தை ஜம்மு காஷ்மீரில் விநியோகித்துள்ளன. ஜெர்மனியில் இருக்கும் இந்த அமைப்பின் கிளையும் ஜம்மு காஷ்மீர் பிரிவினைவாத சக்திகளுக்கும் ஆதரவு அளித்துள்ளது.

இஸ்லாமிய தொண்டு நிறுவனங்களின் பார்வையாளர்கள், இந்த தன்னார்வ தொண்டு நிறுவனமானது துருக்கியின் மத இயக்குனரகம், அதிபர் டயானெட் எர்டோகனின் மத நிகழ்ச்சிகளை தீவிரமாக ஊக்குவிப்பதாக நம்புகின்றனர். இந்த இஸ்லாமிய அமைப்பானது உலகின் தன்னார்வ தொண்டு நிறுவன அமைப்பாக ஐடிஎஸ்பி.யில் உறுப்பினராகவும் உள்ளது. இந்த ஐடிஎஸ்பி.யானது 370வது பிரிவை ரத்து செய்வதற்கான இந்தியாவின் நடவடிக்கையை விமர்சித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் இந்த நடவடிக்கை உலக அமைதி மற்றும் ஸ்திரதன்மைக்கான அச்சுறுத்தல் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதேபோல், இந்தியாவின் பிற பகுதிகளில் குறிப்பிடத்தக்க தளத்தை கொண்ட மற்றொரு முக்கிய அமைப்பு ஹேடர் அறக்கட்டளையாகும். இந்த அமைப்பானது காஷ்மீரில் சமூக தொண்டு பணிகளை நடத்தி வருகிறது. 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதிக்கு பின் அது தனது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது. துருக்கி அமைப்புகளின் இந்த செயல்பாடுகள் நாட்டின் ஸ்திரதன்மைக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருப்பதாகவும் அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.  இது மட்டுமின்றி, இந்த அமைப்புகள் நிதி மோசடியில் ஈடுபடுவதாகவும்  சந்தேகம் எழுந்துள்ளது.

வெளிநாட்டு பணத்தின் மூலமாக காஷ்மீரில் அறக்கட்டளை, ஜகாத் மற்றும் கணக்கிடப்படாத வெளிநாட்டு பணத்தின் மூலமாக தீவிரவாதிகளுக்கு நிதியுதவில் ஈடுபட்டு வருவதாகவும் நம்பப்படுகிறது. தவிர நாடு முழுவதும் தீவிர இஸ்லாமிய மனப்போக்கை ஊக்குவிப்பதையும் குறியாக கொண்டு இயங்கி வருகின்றன. இவற்றின் செயல்பாடுகளை அமலாக்கத் துறையும், மத்திய உளவு அமைப்பகளும் தீவிரமாக கண்காணிக்க தொடங்கி இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கோயில் மீது தாக்குதல் நடத்த முயற்சி

காஷ்மீரில் தாக்குதல் நடத்தி வரும் தீவிரவாதிகளை பாதுகாப்பு படைகள் வேட்டையாடி வருகின்றன. இதனால், ஜம்முவில் குழப்பத்தை ஏற்படுத்தும் பாகிஸ்தானின் முயற்சி தோல்வியை சந்தித்து வருகிறது. இந்நிலையில், மத வழிபாட்டு தலங்கள் மீது தாக்குதல் நடத்துவதின் மூலம், மதக்கலவரத்தை தூண்டும் புதிய சதியை தீவிரவாதிகள் கையில் எடுத்துள்ளனர். இதன் ஒரு கட்டமாக, ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கோயில் மீது தாக்குதல் நடத்த முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதிகளின் சதியை போலீசார் நேற்று முறியடித்தனர். இதற்காக கையறி குண்டுகளுடன் வந்த 3 பாக்.் தீவிரவாதிகளை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: