ஜோ பிடன், நெதன்யாகுவை தொடர்ந்து தடுப்பூசி முதல் ‘டோஸ்’ போட்டு கொண்ட சவுதி இளவரசர்

ரியாத்: உலக தலைவர்கள் ஜோ பிடன், பெஞ்சமின் நெதன்யாகுவை ெதாடர்ந்து சவுதி  அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கு கொரோனா தடுப்பூசி  போடப்பட்டுள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்பால் சவுதி  அரேபியாவில் இதுவரை சுமார் 3.82 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு சுமார் 6,200 பேர்  மரணம் அடைந்துள்ளனர்.  

இங்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து  வருகிறது. கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தின் கீழ் சவுதி அரேபியாவின் பட்டத்து  இளவரசர் முகமது பின் சல்மான் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்.   நேற்று அவருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் மருந்து  செலுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி ஒரு சில ஊடகங்கள் தவறுதலாக சவுதி அரேபியா பட்டத்து  இளவரசருக்கு நாட்டில் முதல் தடுப்பூசி போடப்பட்டது எனச் செய்திகள்  வெளியிட்டிருந்தன.  அதை அரசின் செய்தித் துறை திருத்தி அவருக்கு முதல் டோஸ்  மருந்து செலுத்தப்பட்டுள்ளது என்று விளக்கம் அளித்துள்ளது.

கொரோனா தடுப்பூசியை  போட்டுக் கொண்ட உலகத் தலைவர்களின் பட்டியலில் சவுதி அரேபியாவின் இளவரசர்  முகமது பின் சல்மானின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த வாரம்,  இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேரடி தொலைக்காட்சியில் தடுப்பூசியை  பெற்றார். இந்த வார தொடக்கத்தில், புதிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனுக்கும்  கொரோனா வைரஸ் தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டது என்பது  குறிப்பிடத்தக்கது.

Related Stories: