மும்பை: கிறிஸ்துமசையொட்டி முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் சான்டா கிளாசாகவே மாறி தனது ரசிகர்களுக்கு வாழ்த்து கூறியுள்ளார். இதேபோல முன்னாள் வீரர் விவிஎஸ் லஷ்மண் இந்த நாளில் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி கிடைக்க வேண்டும் என்று தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.