வைணவ திருத்தலங்களில் எளிய முறையில் வைகுண்ட ஏகாதசி கொண்டாட்டம்

பெங்களூரு: பெங்களூரு உள்பட கர்நாடக மாநிலத்தில் உள்ள வைணவ திருத்தலங்களில் இன்று பூலோக சொர்க்கம் என்று அழைக்கப்படும் வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படுகிறது. கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்காமல் பூஜைகள் நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள வைணவ திருத்தலங்களில் மார்கழி மாதம் வரும் ஏகாதசி  நாளில் வைகுண்ட ஏகாதசி தினம் கொண்டாடப்படுகிறது.

அதன்படி இன்று அனைத்து வைணவ திருத்தலங்களிலும் அதிகாலை 3 மணியில் இருந்து ஹோமம், யாகம் நடத்தப்படுகிறது. மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் ஆகியவை செய்யப்படுகிறது. அதிகாலை 5.45 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. அதற்கு முன்னதாக அதிகாலை 3 மணி முதல் மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்படுகிறது.

கோயில் வளாகத்தில்  யாகம் நடத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சிகள் அனைத்தும் ஆன்லைன் மூலம் ஒளிபரப்பப்படுகிறது. பெங்களூரு இஸ்கான் கோயில் உள்பட அனைத்து வைணவ திருத்தலங்களில் வைகுண்ட ஏகதாசி எளிமையாக கொண்டாடப்படுகிறது. மாலை கிருஷ்ணர்-ருக்மணி, சத்யபாமா திருகல்யாணம், சீனிவாசன்-பத்மாவதி தாயார் திருகல்யாண உற்சவம் நடக்கிறது.

Related Stories: