பண்ட மாற்று முறைபோல் நிலத்தை பெற்று அயோத்தியில் மசூதி கட்டுவது ஷரியத் சட்டத்திற்கு எதிரானது: தனிநபர் சட்ட வாரியம் எதிர்ப்பு

அயோத்தி: ‘உச்ச நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து அயோத்தியில் கட்ட திட்டமிட்டுள்ள மசூதி, ஷரியத் சட்டத்திற்கு எதிரானது’ என அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரிய உறுப்பினர் ஜபர்யப் ஜிலானி கூறி உள்ளார்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அனுமதி அளித்த உச்ச நீதிமன்றம், பாபர் மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் வழங்க கடந்தாண்டு உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து, அயோத்தியின் தானிபூர் கிராமத்தில் 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு நவீன வடிவமைப்பில் மசூதி கட்ட ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்நிலையில், பாபர் மசூதி செயல் திட்ட குழு ஒருங்கிணைப்பாளரும், முஸ்லிம் தனிநபர் சட்ட வாரிய உறுப்பினருமான ஜிலானி கூறுகையில், ‘‘வக்பு சட்டத்தின் சட்டத்தின்படி, மசூதி அல்லது அதற்கான நிலத்தை பண்டமாற்று முறையில் பெற முடியாது.

எனவே, புதிதாக மசூதி சட்டப்படுவது வக்பு சட்டத்திற்கு எதிரானது. அதே போல, ஷரியத் சட்டத்தின்படியும் அது சட்ட விரோதமானது. சன்னி வக்பு வாரியம் மத்திய அரசின் நெருக்கடியில் செயல்பட்டு வருகிறது,’’ என்றார்.இதற்கு மசூதி கட்ட அமைக்கப்பட்டுள்ள இந்திய-இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளை செயலாளர் அதர் ஹூசேன், ‘‘ஷரியத் சட்டத்தை அவரவர் இஷ்டத்திற்கு வளைத்துக் கொள்கின்றனர். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இந்த நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் மசூதி கட்டுவதில் என்ன தவறு இருக்கிறது?’’ என கூறி உள்ளார்.

Related Stories: