பல கோடிக்கு பரிவர்த்தனையா?: பெரம்பலூர் வங்கியில் சிபிஐ திடீர் சோதனை

பெரம்பலூர்: பெரம்பலூரில் உள்ள பேங்க் ஆப் பரோடா வங்கியில் சிபிஐ அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர். பல கோடிக்கு பரிவர்த்தனை நடந்ததா? என 5 மணி நேரம் நடந்த விசாரணையால் பரபரப்பு ஏற்பட்டது.

 பெரம்பலூர் வெங்கடேசபுரம் பகுதியில் கடந்த 5 ஆண்டுகளாக தனியார் வாடகை கட்டிடத்தில் பேங்க் ஆப் பரோடா வங்கி இயங்கி வருகிறது. சமீபத்தில் வங்கிகளை ஒன்றிணைக்கும் ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைக்கேற்ப விஜயா வங்கி, தேனா வங்கி ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன.

இதனால் இந்த வங்கியில் 10 ஆயிரம் பேர் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.  இந்நிலையில் நேற்று காலை 11 மணி அளவில் மதுரையை சேர்ந்த சிபிஐ இன்ஸ்பெக்டர் மதுசூதனன் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர் திடீரென வங்கிக்குள் நுழைந்தனர்.

மேலாளர் அறையில் 5 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தப்பட்டது. சமீபத்தில் நடந்த வங்கி பண பரிவர்த்தனையில் வாடிக்கையாளர்களில் குறிப்பிட்ட நபர்கள் அளவுக்கு அதிகமாகவோ, கோடிக்கணக்கிலோ பணத்தை வெளியில் எடுத்துள்ளார்களா?, அளவுக்கு அதிகமாக டெபாசிட் செலுத்தியுள்ளனரா? என்பது குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Related Stories: