பசுவதை சட்டத்தை கோவாவில் பாஜ அரசு ஏன் அமல்படுத்தவில்லை? எம்.எல்.ஏ தினேஷ்குண்டுராவ் கேள்வி

பெங்களூரு: மாநிலத்தில் பசுவதை சட்டத்தை அமல்படுத்த முயற்சித்து வரும் பா.ஜ. அரசு கோவா மாநிலத்தில் ஏன் அதை அமல்படுத்த முயற்சிக்கவில்லை என்று எம்.எல்.ஏ. தினேஷ்குண்டுராவ் கேள்வி எழுப்பினார். இது தொடர்பாக அவர் டிவிட்டரில் கூறியதாவது: மாநிலத்தில் பசுவதை சட்டம் அமல்படுத்தப்படும் என்று பா.ஜ. தேசிய பொதுசெயலாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார். ஆனால் இந்த சட்டத்தை கோவா மாநிலத்தில் அமல்படுத்த அவருக்கு தைரியம் ஏன் இல்லை என்று கேள்வி எழுப்பினார்.  மாநிலத்தில் புனிதமான பசு கோவாவில் என்ன என்று மறுபடியும் கேள்வி எழுப்பினார். பசுவதை சட்டம் தொடர்பாக பா.ஜவினர் குழப்பமான பதில் அளித்து வருகின்றனர். மாநிலத்தில்

பசுவதை சட்டம், கடுமையான நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வருவதால் கோவா மாநிலத்தில் மாட்டிறைச்சிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

கோவா மாநிலத்துக்கு அதிகமான மாட்டிறைச்சி அனுப்பிவைக்கப்படுகிறது. ஆனால் மாநிலத்தில் திடீர் என்று பசுவதை சட்டம் கொண்டு வந்துள்ளதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று அம்மாநில முதல்வர்  தெரிவித்துள்ளார்.

பசுவை நாங்கள் பூஜை செய்கிறோம். ஆனால் சிறுபான்மையினர் வளர்ச்சியும் நமக்கு முக்கியமாகவுள்ளது. சிறுபான்மையினர் மாட்டிறைச்சியை தினமும் உணவில் சேர்த்துக்கொள்கின்றனர்.இதனால் உணவு தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் சவாந்த் தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ள கருத்துக்கள் அனைத்தையும் டிவிட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

Related Stories: