கோவாவில் பீப் பற்றாக்குறை மாநிலங்களில் இருந்து மாடு கொண்டு வரலாம்

பனாஜி: `பிற மாநிலங்களில் இருந்து மாடுகளை கொண்டு வந்து இறைச்சிக்காக வெட்டலாம்,’ என்று கோவா முதல்வர் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் இருந்து குறைந்த அளவிலான மாட்டிறைச்சி மட்டுமே வினியோகிக்கப்படுவதால், கோவாவில் மாட்டிறைச்சிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், செய்தியாளர்களை நேற்று சந்தித்த இம்மாநில முதல்வர் பிரமோத்  சாவந்த், ``இந்த தட்டுப்பாட்டிற்கு பதிவு பெற்ற ஏஜென்ட்டுகளே காரணம். அவர்களால் அண்டை மாநிலங்களில் இருந்து மாட்டிறைச்சியை வாங்க முடியவில்லை என்றால், உயிருடன் மாடுகளை கொள்முதல் செய்து கோவா கொண்டு வந்து,  மாநில அரசு நடத்தும் கோவா இறைச்சி வளாக நிறுவனத்தில் இறைச்சிக்காக வெட்டி கொள்ளலாம். ஏற்கனவே, உயிருடன் கொண்டு வரப்படும் மாடுகள் இங்கு வெட்டப்படுகின்றன,’’ என்றார்.

Related Stories: