ஆன்லைன் பதிவு தொடங்காததால் சபரிமலையில் பக்தர்கள் அவதி

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் கொரோனாவுக்கு பின்னர், கடந்த நவம்பர் 16ம் தேதி  தொடங்கிய மண்டல கால பூஜைகளின்போது பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் 2,000 பக்தர்களும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 3,000 பக்தர்களும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கிடையே சபரிமலையில் நேற்று முதல் தினமும் 5,000 பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளித்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பக்தர்கள் https://sabarimalaonline.org என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து, மெய்நிகர் வரிசைப்படி (விர்ச்சுவல் கியூ) மட்டுமே தரிசனத்துக்கு செல்ல முடியும். இந்த இணையதளத்தை கேரள காவல்துறை  நிர்வகித்து வருகிறது. ஆனால் கூடுதல் பக்தர்களை அனுமதிக்க ஆன்-லைன் முன்பதிவு இதுவரை தொடங்கப்படவில்லை. நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தலைமை செயலாளர் தலைமையில் நடைபெறும் உயர்மட்ட குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் ஆன்-லைன் முன்பதிவு ஏற்பாடுகளை காவல்துறையால் ஆரம்பிக்க முடியும். இதற்கான ஏற்பாடுகளை தேவசம் போர்டு தொடங்கியுள்ளது.

Related Stories: