டெல்லி எல்லையில் சீக்கிய மதபோதகர் தற்கொலை மத்திய அரசு மீது காங்கிரஸ் கட்சி பாய்ச்சல்

புதுடெல்லி: புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக சிங்கு எல்லையில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்ட களத்தில் இருந்து சீக்கிய மத போதகர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதற்கு மத்திய அரசே காரணம் என காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி விவசாயிகள் டெல்லி எல்லைகளில் கூடி 22வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சீக்கிய மதபோதகர் சாந்தாராம் சிங்(65) என்பவர், தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அதோடு, பஞ்சாபி மொழியில் ஒரு கடிதம் ஒன்றையும் அவர் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த கடிதத்தில் விவசாயிகள் படும் துயரத்தை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் மத்திய அரசு மீது காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இதுபற்றி அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவிக்கையில்,  மோடி அரசாங்கம் தனது “பிடிவாதத்தை” விட்டுவிட்டு சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்றார். இதுபற்றி போலீசார் கூறுகையில்,”சாந்தாரம் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டது பற்றி எங்களுக்கு போன் மூலம் தகவல் கிடைத்தது. அவர் எழுதியதாக கூறப்படும் கடிதம் பஞ்சாபி மொழியில் உள்ளது. அதனை ஆய்வு செய்து வருகிறோம்” என்றார். அவர் மேலும் கூறுகையில்,குண்ட்லி எல்லையில் விவசாயிகளின் அவல நிலையைப் பார்த்து கர்னாலைச் சேர்ந்த சாந்த் பாபா ராம் சிங் ஜி தற்கொலை செய்து கொண்டார். இந்த நேரத்தில் அவருக்கு எனது இரங்கலும் அஞ்சலியும் தெரிவித்துக்கொள்கிறேன்.

போராட்டத்தில்  பல விவசாயிகள் தங்கள் உயிரைத் தியாகம் செய்துள்ளனர். மோடி அரசாங்கத்தின் மிருகத்தனம் எல்லா வரம்புகளையும் தாண்டிவிட்டது. மோடி தனது பிடிவாதத்தை கைவிட்டு விவசாய எதிர்ப்பு சட்டத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் “என்று ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார்.

Related Stories: