கர்நாடக மாநில எல்லையோர கிராமங்களில் ஜோராக விற்பனையாகும் மதுபானம்

கோலார்: கர்நாடகா-ஆந்திரா மாநில எல்லையில் உள்ள கிராமங்களில் அரசு அனுமதி பெறாமல் பெட்டி கடைகளில் மதுபானம் விற்பனை ஜோராக நடக்கிறது. கோலார் மாவட்டம், முல்பாகல் தாலுகா, கர்நாடகா-ஆந்திரா மாநில எல்லையில் உள்ளது. ஆந்திரா மாநிலத்தில் மதுபானங்கள் விலை அதிகமாக இருப்பதால், அம்மாநிலத்தை சேர்ந்த கிராம வாசிகள் கால்நடையாக கர்நாடக மாநில எல்லையில் உள்ள கிராமங்களுக்கு வந்து குறைந்த விலையில் மதுபானம் வாங்கி செல்கிறார்கள். இதை தெரிந்து ெகாண்ட முல்பாகல் தாலுகாவில் உள்ள எம்.கொல்லஹள்ளி, பையனபள்ளி, எஸ்.ஆனந்தபுரா உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் மாநில அரசின் பொதுதுறை நிறுவனமான எம்எஸ்ஐஎல் மூலம் சலுகை கட்டணத்தில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களை வாங்கி சென்று பெட்டி கடைகளில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள். எல்லையோர கிராமங்களில் மதுபான விற்பனை மிகவும் ஜோராக நடக்கிறது.

இது குறித்து மதுபானம் விற்பனை செய்துவரும் ெபட்டிக்கடை உரிமையாளர் ஒருவர் கூறும்போது, ஆந்திரா மாநிலத்தில் உள்ள பல கிராமங்களை ேசர்ந்தவர்கள் மதுபானம் குடிப்பது மட்டும், வாங்கி செல்வதற்காக கர்நாடக எல்லையில் உள்ள கிராமங்களுக்குள் வருகிறார்கள். அவர்களின் வசதிகாக விற்பனை செய்வதாக தெரிவித்தார். கர்நாடக மாநில கலால்துறை அமைச்சர் எச்.நாகேஷ், முல்பாகல் சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏ என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: