பாகிஸ்தானில் இஞ்சி ஒரு கிலோ ரூ.1,000: பிரதமர் இம்ரானின் முன்னாள் மனைவி காட்டம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ஒரு கிலோ இஞ்சி ரூ.1,000க்கு விற்கப்படுவதாகவும், அத்தியாவசிய பொருட்களின் விலை பலமடங்கு உயர்ந்துள்ளதாக கூறி, பிரதமர் இம்ரான் கானின் முன்னாள் மனைவி டுவிட் செய்துள்ளார். பாகிஸ்தானின்  மொத்த உள்நாட்டு வளர்ச்சி பாதிப்பால் சாதாரண மக்களின் வாழ்க்கை கடினமாகி வருகிறது. இந்நிலையில் பிரதமர் இம்ரான் கானின் முன்னாள் மனைவி ரெஹாம் கான், அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வால் மக்களுக்கு ஏற்பட்ட  பாதிப்பு குறித்து, பாகிஸ்தான் செய்தி சேனல் ஒளிபரப்பிய வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றி உள்ளார்.

 

அதில், ‘ராவல்பிண்டியில் ஒரு கிலோ இஞ்சி ரூ.1,000க்கு விற்கப்படுகிறது. மிளகாய் ஒரு கிலோ ரூ.200-ஐ எட்டியுள்ளது’ என்று தெரிவித்துள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பாகிஸ்தானின் முக்கிய நகரங்களான கராச்சி, இஸ்லாமாபாத்தில்  தக்காளி ஒரு கிலோ ரூ.200க்கு விற்கப்பட்டது. ஒரு குவிண்டால் கோதுமை விலை ரூ.6,000, அதாவது கிலோ ரூ.60க்கு விற்கப்படுகிறது. முதல்முறையாக, கோதுமையின் விலை உச்ச நிலையை எட்டியுள்ளது.

Related Stories: