தங்க நகை பதுக்கல் விவகாரம்: கோவையில் 3 வியாபாரிகளிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை

கோவை: கோவை தியாகி குமரன் வீதி அருகே பவிழம் வீதியை சேர்ந்தவர் நந்தகோபால் (43). தங்க நகை பட்டறை உரிமையாளர். இவருக்கும் கேரளாவை சேர்ந்த முன்னாள் தூதரக ஊழியர் சொப்னா சுரேசிற்கும் தங்கம் கடத்தல் விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக தெரிகிறது. இவர் மூலமாக தங்க கட்டிகள் ஆபரணமாக மாற்றப்பட்டு விற்பனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.  கடந்த 2010ல் நந்தகோபால் மும்பை போலீசில் ஹவாலா பணம், நகை விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டதாக தெரிகிறது. அதன்பிறகு இவர் கோவையில் சிறிய அளவில் பட்டறை நடத்தி பின்னர், தங்க கட்டி, ஆபரண ெதாழிலில் உச்சத்தை எட்டியிருப்பதாக தெரிகிறது. இதுதொடர்பாக அவரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்தபோது சில முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளார்.

மேலும் சொப்னா வழக்கில் அப்ரூவராக மாற சம்மதம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் அவர் அளித்த தகவலின்படி கோவை பெரியக்கடை வீதியில் உள்ள 3 நகை கடை உரிமையாளர்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று ரேஸ்கோர்சில் உள்ள தங்கள் அலுவலகம் அழைத்து விசாரணை நடத்தினர். இதில் கோவைக்கு விமானத்தில் கடத்தி வரப்படும் தங்க கட்டிகள், அதில் தொடர்புடைய நபர்கள் குறித்து துருவித்துருவி கேட்டனர்.

Related Stories: