மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் கங்கனா சந்திப்பு

டெல்லி: தேஜாஸ் என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார் கங்கனா ரனவத். அவர், நேற்றுமுன்தினம் தேஜாஸ் படக் குழுவினருடன் பாதுகாப்பு அமைச்சர்  ராஜ்நாத் சிங்கை சந்தித்தார். இந்த படத்தில் இந்திய விமானப்படை விமானியாக  கங்கனா நடிக்கிறார். இவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘தேஜாஸ் படத்தின்  ஸ்கிரிப்டை விமானப்படையுடன் பகிர்ந்து கொண்டோம். அதற்கான அனுமதி கோரியும்  பாதுகாப்பு அமைச்சரை சந்தித்தேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக கங்கனா  வெளியிட்ட ஒரு அறிக்கையில், ‘நான் ஒரு சிப்பாய் பாத்திரத்தில் நடிக்க  விரும்பினேன். எனக்கு சிறுவயதிலிருந்தே ஆயுதப்படைகள் மீது ஒரு மோகம்  இருக்கிறது. வீரர்கள் மீதான என் உணர்வுகளை என்னால் தடுக்க முடியாது.  அவர்களது வீரத்தைப் பற்றி நான் வெளிப்படையாகப் பேசுகிறேன். அவர்கள்  நாட்டையும் மக்களையும் பாதுகாக்கின்றனர். இந்த படத்தில் நடிப்பது மிகவும்  மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று தெரிவித்தார்.

Related Stories: