வந்தவாசி அருகே சுற்றுலா தலமாக மாறிய வெண்குன்றம் ஏரி

வந்தவாசி: வந்தவாசி அடுத்த வெண்குன்றம் கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக வெண்குன்றம் ஏரியானது நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது. உபரிநீர் வழிந்தோடும் பகுதி தவளகிரீஸ்வரர் மலை கோயிலுக்கு செல்லும் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இதன் அருகே காஞ்சிபுரம் நெடுஞ்சாலையை இணைக்கும் சாலையும் செல்வதால் வாகனங்கள் தங்கு தடையின்றி செல்ல வசதியாக உள்ளது. இந்நிலையில், வெண்குன்றம் ஏரி உபரிநீர் வெளியேறும் பகுதி வந்தவாசி நகரை ஒட்டி உள்ளதால் ஏராளமான பொதுமக்கள் நீரில் குளித்து மகிழ்ச்சியை கொண்டாடுகின்றனர். தினந்தோறும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் வருவதால் வெண்குன்றம் ஏரி திடீர் சுற்றுலா தலமாக மாறியுள்ளது. ஏராளமான தின்பண்டங்கள் உருவாகியுள்ளது. இதனால் வெண்குன்றம் உபரி நீர் செல்லும் பகுதிக்கு பொதுமக்கள் வருகை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே இருக்கிறது.

Related Stories: