திருச்சி நவல்பட்டில் பாதாள சாக்கடை திட்டம் தோல்வியால் மழை, வெள்ள காலங்களில் பொதுமக்கள் கடும் அவதி: 20 வருடம் போராட்டம் வீண்; கண்டு கொள்ளாத அதிகாரிகள்

திருவெறும்பூர்: திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட அண்ணாநகர் 1984ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் எம்ஜிஆரால் செப்டம்பர் மாதம் 15ம் தேதி அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா நகர் என பெயரிடப்பட்டது. இது சுமார் 2 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பளவில் 2 ஆயிரம் வீடுகள் தமிழக வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் வீடு கட்டும் பணி பகுதி ஒன்று, இரண்டு, மூன்று என்று தொடங்கியது. இந்த நிலையில் 1987ம் ஆண்டு வீடுகள் மற்றும் வீட்டுமனைகள் விற்பனைக்கு வந்தது. அந்த ஆண்டு டிசம்பர் மாதம் அண்ணாநகரில் புதிதாக கட்டப்பட்ட. மக்கள் குடியேற தொடங்கியுள்ளனர்.

தமிழகத்திலேயே முதன் முதலாக வீட்டு வசதி வாரியத்தால் வீடு கட்டும் போது, பாதாளசாக்கடை திட்டத்துடன் தொடங்கப்பட்ட முதல் பகுதி இந்த அண்ணா நகர் பகுதி ஆகும். மேலும் இந்த பகுதியில் சுகாதார கட்டிடம், காவல் நிலையம், தீயணைப்பு நிலையம், இரண்டு உயர்நிலைப் பள்ளிகள், இரண்டு துவக்கப் பள்ளிகள், ஷாப்பிங் மால் ஆகியவை கொண்ட பகுதியாக அமைந்தது. தற்போது ஷாப்பிங் மால் மற்றும் இரண்டு துவக்க பள்ளி கட்டிடங்கள் இடிந்து போய் விட்டது. எம்ஜிஆர் கொண்டு வந்த திட்டத்திற்கு டிஎன் எச்பி என்றும் பெயரிடப்பட்டது.

முரசொலி மாறன் மத்தியில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தபோது திமுக ஆட்சிக்காலத்தில் மாநிலத்தில் கண்ணப்பன் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தபோது டிஎன்யுடிபி என்ற பெயர் எம்ஜிஆர் காலத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் போல் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் இந்த பகுதிகள் வீட்டு வசதி வாரியத்தின் மூலம் வீட்டு மனைகளாக பிரிக்கப்படும் போது, சரியாக இடத்தை சமன் செய்யாமல் ஏனோ தானோ என்று சரி செய்துள்ளனர்.

இந்நிலையில் அண்ணாநகர் பகுதியில் போலீஸ் காலனி, துப்பாக்கி தொழிற்சாலை மெயின் சாலையை தவிர 300க்கும் மேற்பட்ட சிறு சாலைகள் உள்ளது. இந்த குறுக்கு சாலையில் பாதாள சாக்கடை பைப்புகள் சொல்கிறது. அந்த பைப்லைன் கழிவுகள் குழாய் மூடிகள் சரிவர மூடப்படாமலும் உடைந்து போனது. இந்நிலையில் பாதாள சாக்கடை தண்ணீரை சுத்திகரிக்கும் 3 பம்பிங் நிலையங்கள் நவல்பட்டு அண்ணாநகர் பகுதியில் உள்ளது. ஆனால் அந்த மூன்று சுத்திகரிப்பு நிலையங்களும் இயங்கவில்லை.

இந்நிலையில் துப்பாக்கி தொழிற்சாலையில் மழைக்காலங்களில் பெய்யும் மழை நீர் மேட்டு கட்டளை வாய்க்காலில் கீழ் குமுளி வழியாக அண்ணா நகருக்குள் நுழைகிறது. அப்படி அண்ணாநகர் வரும் தண்ணீரால் ஏற்கனவே பாதாளசாக்கடை மூடிகள் திறந்தும் உடைத்தும் உள்ள வழியாக பாதாள சாக்கடைத் தண்ணீர் புகுந்தும் அது அண்ணாநகர் வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட்ட வீடுகளில் வழியாக வீட்டில் உள்ள கழிவறை வழியாக வீட்டிற்குள் மலத்தோடும் மழைநீரும் கலந்து வீட்டிற்குள் வந்து நிறைந்துவிடும். அதனால் அண்ணா நகர் மக்கள் வீட்டிற்குள் இருக்க முடியாமல் பெரும் அவதிக்கும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.

வரும் தண்ணீர் போலீஸ் காலனி, துப்பாக்கி தொழிற்சாலை சாலையை கடந்து செல்கிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக அண்ணா நகர் பகுதி மக்கள் இந்த சிரமத்தை துன்பத்தையும் சுமார் பத்து முறைக்கு மேல் மழை வெள்ளப் பெருக்கினால் இந்த பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இதனை சரி செய்து கொடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் திருச்சி கலெக்டர் மற்றும் அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் என பல்வேறு தரப்பினரிடமும் புகார் மனு கொடுத்துள்ளனர். ஆனால் பலனில்லை.

காரணம் ஊராட்சியின் ஒரு பகுதியாக இருப்பதால் இதற்கு சரிசெய்வதும் பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிக்கும் தொட்டிகளை பராமரிப்பதற்கு உரிய நிதி ஒதுக்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரும் வேதனைக்கு ஆளாகி வருகின்றனர். தற்போது உள்ளாட்சி பிரதிநிதிகள் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு திருச்சி மாநகராட்சியில் இருந்து மாதம் ஒரு முறை மாநகராட்சி கழிவுநீர் சுத்திகரிப்பு லாரிகள் வந்து கழிவுநீரை சுத்தம் செய்து செல்வதாகவும் இதை நிரந்தரமாக செய்ய வேண்டும் என்றும்பொதுமக்கள் கூறுவதோடு எம்ஜிஆர் காலத்தில் முதன் முதலாக எம்ஜிஆரால் தொடங்கி வைக்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டத்தை சரியாக பராமரிக்காத காரணத்தினால் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வரும் பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வரும் நிலையில் அதனை சரி செய்வதற்கு தற்போது ஆளும் அதிமுக அரசு முன்வராதது தான் வேதனையாக உள்ளது. இதனை சரிசெய்து கொடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இப்பிரச்சனை குறித்து அப்துல்கலாம் குடியிருப்போர் நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர் ராஜராஜன் கூறும்போது, நவல்பட்டு அண்ணாநகர் பகுதியில் நான் 33 ஆண்டுகளாக குடியிருந்து வருவதாகவும் இந்த பகுதியில் உள்ள பாதாள சாக்கடையை சரியாக பராமரிக்கப்படவில்லை. மேலும் இதனால் மழைக்காலங்களில் பாதிப்புகள் ஏற்படுவதாகவும் தனது வீட்டிற்குள்ளேயும் மழைநீரும் மலம் நீரும் சேர்ந்து வீட்டிற்குள் வந்ததாகவும் மேலும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நமது சங்கத்தின் சார்பாக பல முறை முறையிட்டதாகவும் திருச்சி கலெக்டரையும் நேரடியாக அழைத்து வந்து பார்க்கும்படி கூறி முறையிட்டோம். ஆனால் அவர்கள் இதற்கு செலவு செய்வதற்கு போதிய நிதி இல்லை என தட்டிக் கழித்து விட்டப்பட்டது. இதற்கு காரணம் இது பஞ்சாயத்தின் ஒரு பகுதியாக வருவதால் இந்த பஞ்சாயத்திற்கு தேவையான பாதாள சாக்கடை பராமரிப்பு மற்றும் சுத்திகரிப்பு நிலைய பழுதுகளை சரி செய்வதற்கு நிதி பற்றாது என்றும் இது அதுவே இதுவும் பேரூராட்சியாவோ அல்லது மாநகராட்சியாகவோ இருந்தால் அதில் கிடைக்கும் வருவாயை வைத்து இதனை சரி செய்யலாம்.

திருச்சி மாநகராட்சியில் இருந்து கழிவு நீர் சுத்திகரிப்பு மாதமொருமுறை என கழிவுநீர் சுத்திகரிப்பு லாரி மூலம் சுத்திகரிக்கும் பணி கடந்த ஒரு மாதமாக செயல்பட்டு வருவதாகவும் இதனை நிரந்தரமாக செயல்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதுடன் எம்ஜிஆர் காலத்தால் தொடங்கப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பாதாள சாக்கடையால் பாதிக்கப்பட்டுவரும் அண்ணா நகர் மக்களின் துயரத்தை துடைக்க வேண்டும் என கூறினார். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக அண்ணா நகர் பகுதி மக்கள் இந்த சிரமத்தை துன்பத்தையும் சுமார் பத்து முறைக்கு மேல் மழை வெள்ளப் பெருக்கினால் இந்த பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: