நிதி பற்றாக்குறை என்றால், பொருளாதார நெருக்கடி நிலையை பிறப்பிக்கலாமா?: அரசுக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி

சென்னை: மாற்றுத்திறனாளிகள் பயணிக்க ஏதுவாக பேருந்துகள் கொள்முதல் தொடர்பாக வழக்கில், தலைமை செயலாளர் சண்முகம் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்  செய்தார். அறிக்கையை படித்த நீதிபதிகள், அரசை கடுமையாக சாடியுள்ளனர். நிதிச்சுமை காரணமாக, தாழ்தள பேருந்துகள் கொள்முதல் செய்ய சாத்தியக்கூறுகள் இல்லை அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

இதற்கு, மாநகர போக்குவரத்து கழகத்துக்கு நிதி பற்றாக்குறை என்றால், பொருளாதார நெருக்கடி நிலையை பிறப்பிக்கலாமா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். சென்னையில் தாழ்தள பேருந்துகளை இயக்கும் வகையில், தரமான சாலைகள் அமைக்க வேண்டியது மாநகராட்சியின் கடமை. சட்டங்களை அமல்படுத்த வேண்டியது அதிகாரிகளின் கடமை என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். 

Related Stories: