மூலப்பொருட்கள் விலை உயர்வால் வெட் கிரைண்டர் விலையை 20 சதவீதம் உயர்த்த முடிவு

கோவை: கோவை வெட் கிரைண்டர்கள் மற்றும் உதரிபாகங்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் வெட் கிரைண்டர்களின் விலை 20 சதவீதம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து இச்சங்கத்தின் தலைவர் சவுந்திரக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு தொழில் சிரமங்களுடன் வெட் கிரைண்டர்கள் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறோம். கொரோனா தாக்குதலுக்கு பின்னர் வெட் கிரைண்டர்கள் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படும் பல்வேறு மூலப்பொருட்களின் விலை 25 சதவீதம் முதல் 200 சதவீதம் வரை உயர்ந்து விட்டது. மேலும் மூலப்பொருட்களின் தட்டுப்பாடும் அதிகரித்துவிட்டது. ஆகையால் மூலப்பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்கும், பொருட்கள் தட்டுப்பாடுகளை நீக்குவதற்கும் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி மனுக்கள் அனுப்புவதுடன் வெட் கிரைண்டர்களின் விற்பனை விலைகளை 20 சதவீதம் உயர்த்துவது என முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: