விவசாயிகள் போராட்டத்திற்கு மத்தியிலும் ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக அமோக வெற்றி

ஜெய்ப்பூர், :ராஜஸ்தான் மாவட்ட கவுன்சில் உறுப்பினர் தேர்தலில் பாஜக அதிக இடங்களையும், ஆளும் காங்கிரஸ் குறைந்த இடங்களையும் கைப்பற்றி உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 21 மாவட்டங்களைச் சேர்ந்த 636 இடங்களுக்கான மாவட்ட கவுன்சில் உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றன.

இந்தத் தேர்தல்களின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, இதுவரை அறிவிக்கப்பட்ட முடிவுகளின்படி, மொத்தம் 14 மாவட்டங்களில் பாஜக ஆதிக்கம் செலுத்தி உள்ளது. அதேசமயம் காங்கிரஸ் ஐந்து மாவட்டங்களில் வென்றுள்ளது. தேர்தல் முடிவுகளின்படி பாஜக 323 இடங்களிலும், காங்கிரஸ் 246 இடங்களிலும் வென்றுள்ளது. பஞ்சாயத்து சமிதி தேர்தலில் மொத்தமுள்ள 4,371 இடங்களில் பாஜக 1,836 இடங்களையும், காங்கிரஸ் 1,718 இடங்களையும் வென்றுள்ளதால் ஆளுங்கட்சி தரப்பு கவலையடைந்துள்ளது.

Related Stories: