வாய்க்குள் புகுந்த வண்டு: இளம்பெண் பரிதாப சாவு

திருப்பூர்: திருப்பூர் மங்கலத்தை அடுத்த அக்ரஹாரப்புத்தூரை சேர்ந்தவர் பிரகாஷ் என்பவரின் மனைவி சுகன்யா (27). 4 வயதில் ஆண் குழந்தை உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சுகன்யாவின் வாய்க்குள் எதிர்பாராதவிதமாக வண்டு சென்றதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சாமளாபுரம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். வண்டு கடித்ததில் சுகன்யாவின் தொண்டை பகுதியில் திடீரென வீக்கம் ஏற்பட்டு, கடந்த 5ம் தேதி மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக தெரிகிறது.

அக்கம்பக்கத்தினர் சுகன்யாவை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே சுகன்யா பரிதாபமாக இறந்தார்.

Related Stories: