விண்கல் மாதிரியுடன் திரும்பிய ஜப்பான் கேப்சூல்

டோக்கியோ: ஜப்பான் விண்கலத்தில் இருந்து விண்கல் மாதிரிகளுடன் அனுப்பப்பட்ட கேப்சூல், பூமியில் வெற்றிகரமாக தரையிறங்கியது. விண்கல் ஆராய்ச்சிக்காக ஜப்பான் கடந்த 2014ல் ஏவிய ‘ஹயாபுசா- 2’ விண்கலத்தை அனுப்பியது. அது, ‘ரியகு’ விண்கல்லில் இருந்து மாதிரிகளை சேகரித்து, அதை பூமிக்கு சிறிய கேப்சூல் மூலமாக அனுப்பியது. இந்த விண்கல், பூமியில் இருந்து 30 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்நிலையில், விண்கல் மாதிரிகள் அடங்கிய கேப்சூல், நேற்று பூமிக்கு வெற்றிகரமாக திரும்பியது. ஆஸ்திரேலியாவில் உள்ள உமேரா என்ற இடத்தில் தரையிறங்கிய அதை, ஜப்பான் விண்வெளி ஆய்வு மைய அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். சூரிய மண்டலம் எப்படி உருவானது?, பூமியில் உயிரினங்கள் எப்படி உருவாகின? என்பதை கண்டுபிடிக்க, இந்த விண்கல் மாதிரியின் ஆய்வு உதவும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Related Stories: