கலெக்டரின் உத்தரவை காற்றில் பறக்கவிட்ட அதிகாரிகள்; தாராபுரம் - ஒட்டன்சத்திரம் ரோட்டில் சூரியநல்லூரில் தொடரும் விபத்துகள்

திருப்பூர்: திருப்பூரில், கலெக்டரின் உத்தரவை காற்றில் பறக்கவிடும் அதிகாரிகளால் தாராபுரம் - ஒட்டன்சத்திரம் ரோட்டில் தொடர் விபத்து ஏற்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் - ஒட்டன்சத்திரம் ரோட்டில் சூரியநல்லூர் கிராம சந்திப்பு உள்ளது. இங்கு, அதிகமான விபத்துகள் தொடர்ந்து நடைபெறுவதினால் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. கோவை - பல்லடம் வழியாக தாராபுரம் செல்லும் வாகனங்கள், பஸ்கள் அதிவேகமாக வருவதாலும், அச்சாலையில் மெட்டல் தடுப்புச்சுவர்கள் அருகாமையில், அதிகமாக இருப்பதினால் வாகனங்கள் செல்வதற்கு இடையூறு ஏற்பட்டு விபத்துக்கள் அதிகமாக நடைபெறுகிறது.

மேலும், அருகில் உள்ள சூரியநல்லூர் கிராமத்தில் உள்ள பொதுமக்கள் சாலையை கடப்பதற்கு, நடுவில் மெட்டல் தடுப்பு சுவர் இருப்பதினால், குறைந்தது 1 கி.மீ தூரம் சென்று அச்சாலையை கடக்க வேண்டியுள்ளது. இந்நிலையில், நேற்றையதினம் வேகமாக வந்த கார் இரும்பு டிவைடரில் மோதி தலைகீழாக கவிழ்ந்தது. காரில் வந்தவர்கள் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர். இதுகுறித்து, அப்பகுதி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தனர். இந்த மனு மீது தகுந்த நடவடிக்கை எடுத்து மெட்டல் தடுப்பு சுவரை அகற்றி ரவுண்டானா அமைக்க வேண்டும் என கலெக்டர் விஜயகார்த்திகேயன் கடந்த அக்டோபர் மாதம் உத்தரவு வெளியிட்டார். ஆனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது வரை நடவடிக்கை எடுக்கவில்லை. இத்தகைய அதிகாரிகளின் செயல் கலெக்டரின் உத்தரவை மதிக்காமல் காற்றில் பறக்கவிடுவது போல் உள்ளது என அப்பகுதி பொதுமக்கள் கூறி வருகின்றனர்.

Related Stories: