ஒன்பது மாதங்களுக்கு பிறகு ஊட்டி மலை ரயில் இயக்கம்

மேட்டுப்பாளையம்: கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஒன்பது மாதங்களுக்குப் பிறகு மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி வரை மலை ரயில் இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. இதைத்தொடர்ந்து நேற்று காலை மேட்டுப்பாளையத்திலிருந்து சுற்றுலா பயணிகளை அழைத்துக்கொண்டு ஊட்டிக்கு மலை ரயில் புறப்பட்டு சென்றது. இதில் 180 பேர் பயணம் செய்யும் விதத்தில் 4 பெட்டிகளுடன் 5 லட்சம் ரூபாய் கட்டணத்தை ரயில்வே நிர்வாகம் நிர்ணயம் செய்துள்ளது. இதன்படி தனியார் பங்களிப்புடன் நேற்று காலை சுற்றுலா பயணிகள் அழைத்துச் செல்லப்பட்டனர். வெப்பம் பரிசோதனை செய்யப்பட்டு முக கவசத்துடன் சுற்றுலா பயணிகள் அழைத்துச் செல்லப்பட்டனர். தொடர்ந்து  தனியாருடன் இணைந்து சிறப்பு மலை ரயிலை இயக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

Related Stories: