அரிய கழுகை வேட்டையாட சிறப்பு அனுமதி சவுதி இளவரசருக்கு பாகிஸ்தான் ஜிங்ஜாக்

இஸ்லாமாபாத்: அரிய வகை பறவையான, ‘ஹவுபாரா பஸ்டர்ட்’ எனப்படும் வெண்கழுத்து ராஜாளிகளை வேட்டையாடுவதற்கு சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு பாகிஸ்தான்  சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது. ஹவுபாரா என்பது அரபு நாடுகளில் காணப்படும் அரிய வகை வெண் கழுத்து ராஜாளியாகும்.  இவை ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலத்தில் அரேபியா உள்ளிட மத்திய ஆசிய நாடுகளில் இருந்து அதிகளவில் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் உள்ள பாலைவனத்துக்கு இடம் பெயரும். இந்த பறவைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால், பாகிஸ்தானில் இதை வேட்டையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சவுதி அரசர் முகமது பின் சல்மானுக்கு 2020-2021ம் ஆண்டு பருவ காலத்தில் இந்த கழுகுகளை வேட்டையாடுவதற்கு பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சகம்  சிறப்பு அனுமதி அளித்துள்ளது.

இளவரசருடன் அரச குடும்பத்தை சேர்ந்த மேலும் இருவருக்கும் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் தற்போதைய பிரதமர் இம்ரான் கான் எதிர்கட்சி தலைவராக இருந்தபோது, இந்த பறவைகளை வேட்டையாட அனுமதிப்பதை கடுமையாக விமர்சித்து வந்தார். தற்போது அவரே இதற்கு அனுமதி அளித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

* ஹவுபாரா கழுகுகளின் இறைச்சி, பாலியல் வேட்கையை தூண்டும் என்பதால் அரசர்கள், இளவரசர்கள் இதை அதிகளவில் வேட்டையாடி உண்ண விரும்புகின்றனர். அதற்காகவே, இவற்றை வேட்டையாட பாகிஸ்தானுக்கு வருகின்றனர்.

* இதற்கு அனுமதி மறுப்பத்தால் அரபு நாடுகளின் நிதியுதவி கிடைக்காமல் போய் விடுமோ என்ற அச்சத்தில், பாகிஸ்தானும் இந்த சிறப்பு அனுமதி அளித்து ‘ஜிங்ஜாக்’ தட்டி வருகிறது.

Related Stories: