வீட்டில் பதுக்கி வைத்திருந்த கஞ்சா பறிமுதல்

துமகூரு: வீட்டில் பதுக்கிவைத்திருந்த 30 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.துமகூரு நகரம் திலக்பார்க் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பி.எச்.காலனியில் சிலர் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலறிந்த போலீசார் மாவட்ட எஸ்.பி. வம்சிகிருஷ்ணா உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து சம்பவ இடத்துக்கு வந்து ரகசியமாக கண்காணித்தனர்.

அப்போது இதே பகுதியை சேர்ந்த ரீயாஜ், மொகமது தன்வீர், இஷ்பார்த், ஆசீம் ஆகியோர் வீட்டில் கஞ்சா பதுக்கியிருப்பது தெரியவந்தது. இவர்களை பிடிக்க சென்ற போது மூன்று பேர் தப்பி சென்றனர். மொகமத்தன்வீர் மட்டும் சிக்கிக்கொண்டார். அவரை கைது செய்த போலீசார் வீட்டிலிருந்த 30 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்து வழக்கு பதிந்து தப்பி சென்றவர்களை தேடி வருகின்றனர்.

Related Stories:

>