சிகரெட் தகராறை தடுத்த 2 பேர் மீது தாக்குதல்

புதுடெல்லி: தெற்கு டெல்லி நெபுசாராய் பகுதியில் மசூம் மற்றும் 3 பேர் இடையே சிகரெட் தொடர்பாக தகராறு நடந்தது. இந்த தகராறில் ஆத்திரம் அடைந்த 3 பேர் கும்பல் ஷிவ் பூங்காவில் உள்ள மசூம் வீட்டிற்கு சென்று தாக்கினர். அப்போது அதே பகுதியை சேர்ந்த நூருல் மற்றும் புல்லா ஆகியோர் மசூமை காப்பாற்ற முயன்றனர். இதில் ஆத்திரம் அடைந்த கும்பல் இரண்டு பேரையும் தாக்கியது.

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த 2 ேபரையும் எய்ம்ஸ் முதலுதவி சிகிச்சை மையத்தில் சேர்த்தனர். இதுதொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு ஹாப்பி, சச்சின், தீபு பதக் ஆகியோரை கைது செய்தனர்.     

Related Stories:

>