போலி கொரோனா தடுப்பூசி ஆன்லைனில் விற்கப்படலாம்: உலக நாடுகளுக்கு இன்டர்போல் எச்சரிக்கை

புதுடெல்லி: சர்வதேச போலீஸ் என  அழைக்கப்படும் இன்டர்போல் அமைப்பு, மக்களின் பொது பாதுகாப்புக்கு தீவிரமான அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நிகழ்வு, தனிநபர், பொருள் ஆகியவற்றை பற்றி எச்சரிக்க, ஆரஞ்சு நோட்டீஸ் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளது. இந்நிலையில், இந்த அமைப்பு கடந்த புதன்கிழமை 194 நாடுகளுக்கு ஆரஞ்சு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

 அதில், `கோவிட்-19 மற்றும் காய்ச்சலுக்கான போலி தடுப்பூசிகள் தவறான முறையில், சட்ட விரோத விளம்பரம் மூலமாக விற்கப்படுகின்றன. தனிநபர்கள் போலி தடுப்பூசிகளை விளம்பரம் செய்தல், விற்பனை செய்தல், தயாரித்தல் உள்ளிட்ட குற்றங்களும் இதில் அடங்கும். உலகம் முழுவதும் செயல்படும் கிரிமினல் நெட்வொர்க் நிறுவனங்கள் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் போலி கொரோனா தடுப்பு மருந்துகளை விற்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதால், பொது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்,’ என இன்டர்போல் விடுத்துள்ள ஆரஞ்சு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: