லாட்டரி, சூதாட்டத்துக்கு ஜிஎஸ்டி விதிப்பது சரிதான்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி:கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்பில், ‘ அரசு லாட்டரி, தனியார் லாட்டரி என அனைத்து வகை லாட்டரிகளுக்கும், சூதாட்டத்துக்கும்  அதிகபட்சமான 28 சதவீதம் வரி விதிக்கப்படும்,’ என தெரிவித்தார். இத்திட்டம் தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நிலையில், மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு எதிராக சில தனியார் லாட்டரி உரிமையாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில், இந்த அறிவிப்புக்கு தடை விதிக்கும்படி கோரப்பட்டது. இந்த வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்தபோது,‘லாட்டரி மற்றும் சூதாட்டம் ஆகியவற்றை ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் மத்திய அரசு கொண்டு வந்தது சரியானதே. மேலும், இவற்றின் மூலம் வெல்லும் பணத்திற்கும் ஜிஎஸ்டி கட்ட வேண்டும் என்பதில் எந்தவிதமான தவறும் கிடையாது,’ என உத்தரவிட்டு, மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

Related Stories: