மூணாறில் குறைந்த செலவில் தங்கும் வசதி: கேரள லாட்ஜ் பஸ்தினமும் ஹவுஸ் புல்

* இந்த ‘லாட்ஜ் பஸ்’ வசதி மூலம் கடந்த 15 நாட்களில் கேஎஸ்ஆர்டிசி 55 ஆயிரத்து 280 வருமானம் ஈட்டி உள்ளது.

* ஒரு படுக்கைக்கு ஒரு நாளைக்கு 100 மட்டுமே வாடகை வசூலிக்கப்படுகிறது.

*  கம்பளி ேபார்வை தேவைப்பட்டால் கூடுதலாக 50 செலுத்த வேண்டும்.

* மூணாறு டெப்போ கவுண்டரில் இதற்கு முன்பதிவு செய்யலாம்.

* பணம் செலுத்தி விட்டு, மாலை 5 மணிக்கு பஸ்சில் ஏறி படுக்கலாம்.

* 1,600 செலுத்தி மொத்த பஸ்சையும்  குடும்பத்துக்காக முன்பதிவு செய்யலாம்.

திருவனந்தபுரம்: மூணாறுக்கு வரும் சுற்றுலா பயணிகள் குறைந்த செலவில் தங்கி ஓய்வெடுக்க, கேரள அரசு போக்குவரத்து கழகம் (கேஎஸ்ஆர்டிசி) ஏற்பாடு ெசய்துள்ள பஸ்கள் பெரும்பாலான நாட்களில் ஹவுஸ் புல்லாகி வருகின்றன.

கேரள மாநிலம், மூணாறுக்கு வரும் சுற்றுலா பயணிகள் இனி அறைகள் ேதடி அலைய வேண்டாம். கேஎஸ்ஆர்டிசி பஸ்களிலேயே தங்கி ஹாயாக ஓய்வெடுக்கலாம். இதற்காக புதிய ஏசி பஸ்சில் ஒரே நேரத்தில் 16 பேர் தங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரயில்களின் உள்ள ஸ்லீப்பர் கோச் மாடலில், கேரள அரசு பஸ்சில் ஒருவர் படுத்துறங்கும் வகையில் பெட்டிகள் பொருத்தப்பட்டுள்ளன. படுக்கை, மொபைல் சார்ஜிங் போர்ட் உள்பட பல வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த பஸ் மூணாறு ெடப்போவில் பார்க்கிங் செய்யப்பட்டிருக்கும். பஸ்சில் தங்கியிருப்பவர்கள் டெப்போவில் உள்ள கழிவறைகளை பயன்படுத்தி கொள்ளலாம்.

அருகில் உணவகங்களும் உள்ளன. சுற்றுலா பயணிகள் மலிவு விலையில் தங்க அரசு பஸ்களில் ஏற்பாடு செய்யும் இந்த யோசனை, கேஎஸ்ஆர்டிசி நிர்வாக இயக்குனர்  பிஜூ பிரபாகரன் மனதில் உதித்தது. சுற்றுலா பயணிகள் அரசு பஸ்களில் தங்க ஏற்பாடு செய்யப்படுவது கேரள மாநிலத்தில் இதுவே முதல்முறை. இதற்கு முன்பு கேஎஸ்ஆர்டிசி ஊழியர்கள் ஓய்வெடுக்க முக்கிய டெப்போக்களில் பணியாளர் பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மூணாறுக்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு முதற்கட்டமாக 2 ஏசி பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. ஒவ்வொன்றிலும் 16 படுக்கைகள் உள்ளன. இந்த பஸ்கள் நவம்பர் 14 முதல் சுற்றுலா பயணிகளுக்கு, தினசரி வாடகையாக விடப்பட்டு வருகின்றன. 2 பஸ்களும் பெரும்பாலான நாட்களில் நிரம்பி வழிகின்றன.

Related Stories: