ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்: சபரிமலையில் இன்று முதல் 2,000 பக்தர்களுக்கு அனுமதி

திருவனந்தபுரம்: கொரோனா காலம் என்பதால் சபரிமலையில் குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்களே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் 1000 பக்தர்களும், சனி, ஞாயிற்று கிழமைகளில் 2000 பக்தர்களும் அனுமதிக்கப்பட்டு வந்தனர். பக்தர்கள் வருகை குறைந்ததால் கோயில் வருமானமும் கடுமையாக குறைந்தது. இதையடுத்து பக்தர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டும் என்று அரசிடம் தேவசம்போர்டு கோரிக்கை விடுத்தது. தினமும் 10 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்கவேண்டும் என்று ேதசவம்போர்டு கோரியது. ஆனால் கடந்த சில நாட்களாக சபரிமலையில் ேபாலீசார் மற்றும் ஊழியர்களுக்கு ெகாரோனா பரவியதை ெதாடர்ந்து பக்தர்கள் எண்ணிக்கையை மிக கூடுதலாக அதிகரிக்க வேண்டாம் என்று கேரள அரசு முடிவு செய்தது. இந்த நிலையில் பக்தர்கள் எண்ணிக்கையை திங்கள் முதல் வெள்ளிவரை தினமும் 2 ஆயிரமாகவும், சனி ஞாயிறு கிழமைகளில் தலா 3 ஆயிரமாகவும் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று தொடங்கும் என்று ெதரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: