புதுடெல்லி: டெல்லியில் நேற்று காற்றின் தரம் மிகமோசம் பிரிவுக்கு சென்றது. இரு வரும் நாட்களில் மேலும் மோசமடைந்து “கடுமை” பிரிவுக்கு செல்லும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டெல்லியில் நேற்று காலை காற்றின் தரக்குறியீட்டு எண் 346 ஆக பதிவானது. கடந்த 24 மணிநேரத்தில் திங்களன்று 318ஆகவும், ஞாயிறன்று 268 ஆகவும் பதிவானது. அதேபோன்று நேற்று டெல்லியில் நேற்று குறைந்தபட்ச வெப்பநிலை 8.1டிகிரி செல்சியசாகவும், அதிகபட்சம் 26 டிகிரி செல்சியசாகவும் பதிவானது.