விவசாயிகளுக்கு ஆதரவாக தபால் நிலையத்தில் முற்றுகைகடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்- போலீசாரிடையே தள்ளுமுள்ளு: 10 போலீசார் உள்பட 16 பேர் காயம்

கடலூர்: புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்துக்கு ஆதரவாக கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் முன் முற்றுகை போராட்டம் நடத்த நேற்று நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டனர். தபால் நிலைய வாயிலை நோக்கி அவர்கள் சென்றபோது போலீசார் பேரிகாட் அமைத்து தடுத்து நிறுத்தினர். அப்போது இரு தரப்பினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சியினர் பேரிகார்டை வேகமாக தள்ளிய போது தேவநாதன் என்ற போக்குவரத்து காவலரின் தலையில் பட்டு காயமடைந்தார். தொடர்ந்து தள்ளுமுள்ளுவில் 10 போலீசாரும், மாநில செயற்குழு உறுப்பினர் சுப்பராயன் உட்பட 6 கம்யூனிஸ்ட் கட்சியினர் காயமடைந்தனர். அவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது தொடர்பாக மாவட்ட செயலாளர் ஆறுமுகம் உட்பட 60 பேர் கைது செய்யப்பட்டனர்.

Related Stories: