இயற்கை விவசாயத்தில் அசத்தும் மதுரை பெண் விவசாயி: 12 வகை பாரம்பரிய நெல் வகைகளை உருவாக்கி சாதனை

மதுரை: அதிக மகசூல் ஆசையில் ரசாயன உரங்களால் மண்ணை மலடாக்குப்பவர்களுக்கு மத்தியில் இயற்கை விவசாயத்தில் அசத்தி வருகிறார் மதுரையை சேர்ந்த பெண் விவசாயி புவனேஸ்வரி. இதுவரை 12 வகை பாரம்பரிய நெல் வகைகளை உருவாக்கியுள்ள புவனேஸ்வரி இளைஞர்கள், பெண்களை என பலரையும் இயற்கை விவசாயத்தின் பக்கம் திரும்பியுள்ளார். தஞ்சையில் பாரம்பரிய விவசாய குடும்பத்தை சேந்தவர் புவனேஸ்வரி. திருமணத்துக்கு பின் மதுரைக்கு சென்ற புவனேஸ்வரி விவசாயத்தின் மீது இருந்த ஆர்வம் காரணமாக 2017-ல் பயிர் தொழிலை தொடங்கினார். குறைந்த காலத்தில் அறுவடை,

அதிக மகசூல் என்ற ஆசையில் பலரும் ரசாயன உரங்களை தெளித்த போது மாற்று வழியை தேடிய புவனேஸ்வரி, முதலில் 4 வகையான பாரம்பரிய நெல் விதிகளை பயிரிட்டு, இயற்கை உரங்களை மட்டும் பயன்படுத்தி அறுவடையை முடித்ததாக கூறுகிறார். அதே முயற்சியில் கருப்பு கவுனி, துளசிவாசக சீரக சம்பா, கிச்சலி சம்பா, வாடன் சம்பா, கருடன் சம்பா என 12 வகை பாரம்பரிய நெல் விதிகளை உற்பத்தி செய்துள்ளார் புவனேஸ்வரி. நெற்பயிர்களை குழந்தைகளாக பாவிக்கும் புவனேஸ்வரி அதற்க்கு ரசாயன உரங்களை தெளிப்பது பாவச்செயல் என்கிறார்.

தான் உருவாக்கிய பாரம்பரிய நெல் விதைகளை தம்மை தேடி வரும் இளைஞர்கள், பெண்களுக்கு வழங்கும் புவனேஸ்வரி, அதனை விளைவிக்கும் முறையையும் கற்று கொடுக்கிறார். அதேபோல் தமது வயலில் அறுவடை செய்த நெல்லில் வீட்டின் தேவைக்கு போக மீதியை மற்றவர்களுக்கு வழங்கும் பழக்கம் புவனேஸ்வரியிடம் உள்ளது. இயற்கை விவசாயத்தில் அனைவரும் சாதிக்க முடியும் என்று கூறும் புவனேஸ்வரி, வெறும் லாப நோக்கத்தோடு மட்டும் இதனை செய்யக்கூடாது என்கிறார்.

அனைவருக்கும் நஞ்சு இல்லாத உணவு கிடைக்க வேண்டும். ரசாயன உரங்களை தெளித்து மண்ணை மலடாக்கும் செயல்களை தடுக்க வேண்டும் என்பதும் இயற்கை விவசாயி புவனேஸ்வரியின் லட்சியமாகும்.  

Related Stories: