ஜோலார்பேட்டை அருகே பைப் லைன் உடைந்து வீணாகும் காவிரி குடிநீர்

ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டை அருகே கடந்த பல மாதங்களாக காவிரி கூட்டுக்குடிநீர் வீணாகி வருகிறது. இதை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னையில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டபோது, அங்கு குடிநீர் பற்றாக்குறையை போக்க கடந்த ஆண்டு ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து ரயில் மூலம் 4 கோடி லிட்டர் குடிநீர் சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்த குடிநீரை ரயில் மூலம் அனுப்பி வைக்க மேட்டுசக்கரகுப்பம் பகுதியில் உள்ள தரைமட்ட நீர் தேக்கத் தொட்டியில் இருந்து பைப் லைன் அமைக்கப்பட்டது.

தற்போது இந்த பைப்லைன் மூலம் நகராட்சிக்கு உட்பட்ட சில பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த பைப்லைன் உடைந்து பல மாதங்களாக புதூர் பகுதியில் காவிரி கூட்டு குடிநீர் வீணாகி வருகிறது. எனவே உடைப்பு ஏற்பட்டுள்ள பைப் லைனை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: