ஏர் இந்தியா அறிவிப்பு; சென்னை - லண்டன் நேரடி விமான சேவை

புதுடெல்லி: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, வெளிநாடுகளுக்கான முழு அளவிலான விமான சேவையை ஏர் இந்தியா நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளது. இருப்பினும், முக்கியமான சில வெளிநாட்டு நகரங்களுக்கு அது இடைநில்லா சேவையை வழங்கி வருகிறது.

தற்போது, லண்டன் நகரத்துக்கு டெல்லியில் இருந்து வாரத்தில் 7 விமானங்களும், மும்பையில் இருந்து வாரத்தில் 4, கொச்சியில் இருந்து வாரத்துக்கு 3, அகமதாபாத், பெங்களூரு மற்றும் கோவாவில் இருந்து வாரத்துக்கு 2, கொல்கத்தா மற்றும் அமிர்தசரசில் இருந்து வாரம் ஒரு விமானமும் இயக்கப்பட்டு வருகின்றன.

இதேபோல், சென்னையில் இருந்தும் லண்டனுக்கு இடைநில்லா விமான சேவை தொடங்கப்பட உள்ளது. ஜனவரி முதல் இந்த சேவை தொடங்கப்படும் என்று ஏர் இந்தியா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

Related Stories:

>