மிக்- 29 போர் விமானம் அரபிக்கடலில் விழுந்தது: விமானி மாயம்; ஒருவர் மீட்பு

புதுடெல்லி: கடற்படைக்கு சொந்தமான மிக் 29 பயிற்சி விமானம் அரபிக்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் ஒரு விமானி மீட்கப்பட்ட நிலையில் மற்றொரு விமானியை கடற்படை தேடி வருகின்றது. கோவாவில் உள்ள கடற்படை தளத்தில் 40 மிக்-29 கே ரக போர் விமானங்கள் உள்ளன. இவை கடற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் விக்ரமாதித்யா விமானந்தாங்கி கப்பலில் இருந்து இயக்கப்படுகின்றன. இந்நிலையில் விக்ரமாதித்யா கப்பலில் இருந்து நேற்று முன்தினம் மிக்-29கே பயிற்சி விமானம் புறப்பட்டுச்சென்றது. பயிற்சியில் ஈடுபட்டு இருந்த விமானம் மாலை 5 மணியளவில் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விமானத்தில் இருந்த ஒரு விமானி மீட்கப்பட்டார். மற்றொரு விமானியை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகின்றது. கடல் மற்றும் வான் வழியாக தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விமான விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். சமீபகாலத்தில் மிக்-29 கே விபத்துக்குள்ளாகும் 4வது சம்பவம் இது.

Related Stories: