நியூசிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் இன்று டி20 பலப்பரீட்சை

கொரோனா பீதிக்கு இடையில் வெளிநாடு சென்று விளையாடிய தைரியமான அணி என்ற பெருமை வெஸ்ட் இண்டீசுக்கு உண்டு. கடந்த மாதமே நியூசிலாந்து சென்ற வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் தனிமைப்படுத்துதலை முடித்துவிட்டனர். பயிற்சி ஆட்டங்களிலும் விளையாடினர். நியூசிலாந்து அணி கொரோனா பீதிக்கு பிறகு முதல்முறையாக சர்வதேச போட்டியில் இப்போதுதான் விளையாட உள்ளது. கடைசியாக பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இந்தியாவில் விளையடியதுதான் சர்வதேச போட்டியாகும். டிம் சவுத்தீ தலைமையிலான நியூசிலாந்து அணியில், ஐபிஎல் தொடரில் கலக்கிய பெர்குசன், நீஷம் ஆகியோருடன் ராஸ் டெய்லர், கப்தில், சான்ட்னர் என அதிரடி ஆட்டக்காரர்களும் கலக்க காத்திருக்கின்றனர். அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் அணியில் கேப்டன் போலார்டு, ஹெட்மயர், நிகோலஸ் பூரன், ஷெல்டன் கார்டல், பேபியன் ஆலன் என பலரும் அதிரடியை காட்ட உள்ளனர். இந்த 2 அணிகளும் கடைசியாக மோதிய 5 டி20 போட்டிகளில் 3 போட்டிகளில் நியூசிலாந்தும், ஒரு போட்டியில் வெஸ்ட் இண்டீசும் வென்றுள்ளன. ஒரு போட்டி கைவிடப்பட்டது. இன்று டி20 போட்டியில் இரண்டு அணிகளும் களம் காண்கின்றன.

Related Stories: