சென்னையில் 2 குழுக்கள் தயாராக உள்ளன: கடலூர் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் கூடுதல் கவனம்...தேசிய பேரிடர் மீட்பு சீனியர் கமாண்டென்ட் பேட்டி.!!!

சென்னை: நிவர் புயல் மீட்பு பணிகளுக்கான சென்னை வந்துள்ள தேசிய பேரிடர் மீட்பு சீனியர் கமாண்டென்ட் ரேகா நம்பியார் இன்று காலை சென்னை ஏழிலகத்தில், தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து, நிவர் புயல் மீட்பு நடவடிக்கைகள் குறித்து தேசிய பேரிடர் மீட்பு சீனியர் கமாண்டென்ட் ரேகா நம்பியார் விளக்கம் அளித்துள்ளார்.

அப்போது, நிவாரண பணிக்கு மொத்தம் 19 குழுக்கள் வந்துள்ளது. அதில், 15 குழுக்கள் தமிழகத்திலும், 4 குழுக்கள் புதுச்சேரியிலும் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படும். தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலும் எங்கள் மீட்புக்கழுவினர் உள்ளனர். சென்னையில் 2 குழுக்கள் தயாராக உள்ளன. தேவைப்பட்டால் கூடுதல் குழு வரவழைக்கப்படும்.

அதீத வெள்ளம் ஏற்படும்போது மக்களை வெளியேற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. புயலின்போது மரங்கள் விழுந்து, கட்டடங்கள் சேதமடைய வாய்ப்புள்ளது. முழு கட்டிடங்களாக இல்லாத வீடுகள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. செம்பரம்பாக்கத்தில் தண்ணீர் திறப்பதால் அச்சம் வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.

Related Stories: