சிவகங்கையில் சுகாதாரப்பணி இணை இயக்குநர் அலுவலகத்தில் அதிரடி ரெய்டு

சிவகங்கை: சிவகங்கை பழைய அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் சுகாதாரப்பணிகள் இணை இயக்குநர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இணை இயக்குநராக இளங்கோ மகேஸ்வரன் மற்றும் 10க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். நேற்று மாலை 4 மணிக்கு திடீரென சிவகங்கை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இந்த அலுவலகத்திற்கு வந்தனர். உடனே அலுவலர்கள் பணத்தை வெளியில் வீசி எறிந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து போலீசார் அலுவலகத்தின் வெளியில் உள்ள கழிவுநீர் தொட்டி, அலுவலகத்தை சுற்றியுள்ள இடம், இணை இயக்குநரின் ஜீப் உள்ளிட்டவற்றில் சோதனை செய்தனர். ஆனால் பணம் எதுவும் சிக்கவில்லை.

தொடர்ந்து அலுவலகத்தின் கதவுகளை பூட்டி விட்டு சோதனை நடத்தினர். இதில் பணம் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. இரவு நீண்டநேரம் சோதனை நடந்தது. மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் வேறு மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரிகளில் பணியாற்ற இடமாறுதல் பெறுகின்றனர். இந்த மருத்துவர்களை விடுவிப்பு செய்ய லஞ்சம் பெறுவதாகவும், செவிலியர்களை இடமாறுதல் செய்ய லஞ்சம் பெறுவதாகவும் எழுந்த புகாரால் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது.

Related Stories: