தேர்தல் ஆணையம் தகவல் பீகார் தேர்தலில் போட்டியிட்ட 1,197 பேருக்கு குற்ற பின்னணி

புதுடெல்லி: பீகார் மாநிலத்தில் மொத்தமுள்ள 243 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் 3 கட்டங்களாக சமீபத்தில் நடந்து முடிந்தது. முதல் கட்ட தேர்தல் அக்டோபர் 28ம் தேதியும், 2வது மற்றும் 3வது கட்ட தேர்தல் முறையே கடந்த 3 மற்றும் 7ம் தேதியும் நடைபெற்றன. இந்த தேர்தலில் 371 பெண் வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 3,733 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில் 1,197 பேர் குற்றப் பின்னணி உடையவர்கள் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், இவர்களில் 467 பேர் அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிகள் சார்பில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். மீதமுள்ள 730 பேர் பதிவு செய்யப்பட்ட அல்லது பதிவு செய்யப்படாத கட்சிகள் சார்பில், சுயேட்சை வேட்பாளர்களாக போட்டியிட்டுள்ளனர். கொரோனா நோய் தடுப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றாமல் பேரணிகள் மற்றும் தலைவர்கள், வேட்பாளர்கள் பங்கேற்ற பிரசார கூட்டங்கள் நடத்திய அமைப்பாளர்கள் மீது மொத்தம் 156 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: