ஆஸி. பேட்ஸ்மேன்களுக்கு நிச்சயம் நெருக்கடி அளிப்பேன்; முகமது ஷமி பேட்டி

சிட்னி: இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஷமி அளித்துள்ள பேட்டி: ஐபிஎல் போட்டியில் செயல்பட்ட விதம் எனக்கு மிகுந்த நம்பி–்க்கையையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது. என்னை சரியான இடத்துக்கு கொண்டு சென்றுள்ளேன். என் தோள்மீதிருந்த சுமை குறைந்தது போன்று உணர்கிறேன். ஆஸ்திரேலியத் தொடருக்கு எந்தவிதமான நெருக்கடியும் இல்லாமல் நான் தயாராகுவேன். இப்போது நான் மிகவும் தன்னம்பிக்கையுள்ளவராக உணர்கிறேன். டெஸ்ட்டில் சிறப்பாக பந்துவீச வேண்டும் என்பதற்காக தீவிரமாக பயிற்சி செய்து வருகிறேன். சரியான லைன் லென்த்தில் பந்துவீசிவிட்டால் எந்தவிதமான போட்டியிலும் நாம் சிறப்பாகச் செயல்பட முடியும்.

ஆஸி. அணியின் உள்ள வார்னர், ஸ்மித் பற்றியெல்லாம் கவலையில்லை. நம்மிடம் திறமையான பேட்ஸ்மேன்கள், பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். உலகத்தரமான பேட்ஸ்மேனாக இருந்தாலும்கூட சரியான பந்துவீச்சை செலுத்தினால் விக்கெட்டை இழந்துவிடுவார். உமேஷ் யாதவ், பும்ரா, இசாந்த் சர்மா போன்ற திறமையான பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே மணிக்கு 140 கி.மீ குறைவில்லாமல் பந்துவீசுவார்கள். ஆஸ்திரேலியாவில் இவர்களின் வேகப்பந்துவீச்சு கடும் நெருக்கடியை எதிரணிக்கு அளிக்கும். ஆஸ்திரேலிய அணிக்கு எனது பந்துவீச்சு நிச்சயம் நெருக்கடியை அளிக்கும். இவ்வாறு ஷமி தெரிவித்தார்.

Related Stories: