குயின்ஸ்டவுன்: நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் டேரன் பிராவோ அதிரடி சதத்தால் வெஸ்ட் இண்டீஸ் அணி முன்னிலை பெற்றது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டி20 போட்டி நவ. 27ம் தேதி ஆக்லாந்தில் நடைபெறுகிறது. ஐபிஎல் போட்டியில் விளையாடிவிட்டு நியூசிலாந்து சென்றுள்ள இரு அணி வீரர்களும் இன்னும் தனிமைப்படுத்தலை முடிக்கவில்லை. இந்நிலையில் நியசிலாந்து-ஏ அணிக்கு எதிரான முதல் பயிற்சி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் விளையாடி வருகிறது. இந்த 3 நாள் போட்டியில் டாஸ் வென்று களம் கண்ட நியூசிலாந்து 79 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 308 ரன் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. அந்த அணியின் ரச்சின் ரவீந்திரா அதிகபட்சமாக 112 ரன் விளாசினார்.